ரூபாய் மதிப்பு 23 காசு குறைவுரூபாய் மதிப்பு 23 காசு குறைவு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.33 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.33 ...
தங்க நாணயங்கள் விற்பனை கனஜோர் :தட்டுப்பாடு ஏற்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
03:51

சேலம்:தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், தங்க ஆபரணங்களை விட, தங்க நாணயங்களின் விற்பனை, திடீர் என உயர்ந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற, இறக்கம், பங்கு வர்த்தகம், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஆகியவற்றை பொறுத்து, இந்திய ஆபரண சந்தையில், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையில், மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்.தேர்தல்இந்தியாவில், சில மாதங்களாக, உச்சத்தில் இருந்து வந்த, தங்கத்தின் விலை, பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், சரிவடைந்து வருகிறது.
பிப்ரவரியில் கிராம், 2,800 ரூபாய், மார்ச்சில், 2,888 ரூபாய், ஏப்ரலில், 2,698 ரூபாய், மே மாதத்தில், 2,812 ரூபாய்க்கு விற்ற தங்கம், ஜூன், 1ம் தேதி, 2,582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதங்களில் இல்லாத அளவுக்கு, நேற்று, மேலும் சரிவு ஏற்பட்டு, கிராம், 2,562 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மே மாதத்துடன் ஒப்பிடும் போது, நேற்று வரை, கிராமுக்கு, 250 ரூபாயும், சவரனுக்கு, 2,000 ரூபாய் வரையும், சரிவு ஏற்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, கிராம், 2,563 ரூபாய்க்கும், சவரன் 20 ஆயிரத்து 504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கக்காசு கிராம், 2,597 ரூபாய்க்கு விற்பனையானது.தங்கத்தின் விலையில், தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், தங்க நாணயங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது, தங்க நாணயங்கள் விலை சற்று குறைவு என்பதே, அதன் மீதான மோகம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நகைகள்தற்போதைய நிலவரப்படி, தங்கம் கிராம், 2,563 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதனுடன் செய்கூலி, சேதாரம், வரி விதிப்பு ஆகியவற்றை சேர்க்கும் நிலையில், கிராம், 2,750 ரூபாயாக விற்கப்படுகிறது. அதுவே, ஒரு கிராம் தங்க நாணயம், 2,597 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதனால், தங்க நாணயங்கள் விற்பனை கனஜோராக நடைபெறுகிறது. விற்பனை களை கட்டியுள்ளதால், தங்க நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேலம் செல்வமாளிகை ஜூவல்லரி உரிமையாளர் மாணிக்கம் கூறியதாவது:தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விற்பனை சற்று உயர்ந்துள்ளது. கடந்த காலத்தைபோல் அல்லாமல், தற்போது தங்க ஆபரணங்களுக்கு பதில், தங்க நாணயங்களின் விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.திருமணம்கடந்த காலங்களில், திருமணம், பிறந்த நாள், கிரகப்பிரவேசம் போன்ற விழாக்களில், அன்பளிப்பு வழங்க, ஆபரணங்களை தேர்வு செய்தனர்.ஆனால், தற்போது, அன்பளிப்பாக, தங்கக்காசுகளை வழங்குகின்றனர்.அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், தங்கம் விலை, மேலும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)