பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:02

புதுடில்லி: சென்ற ஜன., – மார்ச் வரை, புதிய வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன் இணைப்புகளை வழங்கியதில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.இதே காலத்தில், உலகளவில், புதிய மொபைல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12 கோடியாக அதிகரித்து உள்ளது.இதில், இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் மட்டும், 2.80 கோடி சந்தாதாரர்களை புதிதாக இணைத்து கொண்டுள்ளன.மொத்தம் வழங்கப்பட்ட புதிய இணைப்புகளில், இந்தியாவை உள்ளடக்கிய ஐந்து நாடுகளின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.இந்த பட்டியலில், சீனா, 1.90 கோடி புதிய சாந்தாதாரர்களுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை அடுத்து, இந்தோனேஷியா (70 லட்சம்), தாய்லாந்து (60 லட்சம்), வங்கதேசம் (40 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன.வரும் 2015ம் ஆண்டில், மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை, உலக மக்கள் தொகையை காட்டிலும் அதிகமாக இருக்கும்; 2019ம் ஆண்டிற்குள், மொபைல் போன் சார்ந்த அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை, 760 கோடியை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மொத்த மொபைல் சேவை இணைப்புகளில், 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த மொபைல்போன் விற்பனையில், ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு, 65 சதவீதமாக உள்ளது.வரும் 2019ம் ஆண்டில், ஸ்மார்ட் போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 560 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|