பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:10

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற வற்றால், பங்கு வர்த்தகம் நேற்று சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பையொட்டி, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.அதேசமயம், ரியல் எஸ்டேட், உலோகம், பொறியியல் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 52.76 புள்ளிகள் சரிவடைந்து, 24,805.83 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஹிண்டால்கோ, எச்.யு.எல்., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 13.60 புள்ளிகள் குறைந்து, 7,402.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|