பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:16

புதுடில்லி ;மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று முதல் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதிநிதிகள்முதலாவதாக, அவரை வேளாண் துறை பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர். இதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆண்டுதோறும், மத்திய பட்ஜெட் தயாரிப்பிற்கு முன், வேளாண், தொழில், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன், நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், முதன் முதலாக வரும், ஜூலை முதல் வாரம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சவால்கடந்த மே 27ம் தேதி நிதியமைச்சராக பொறுப்பேற்ற உடன், அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐந்து துறைகளின் செயலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, மானியச் சுமை உள்ளிட்ட சவால்களை சமாளிக்கும் வகையில், பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு, அருண் ஜெட்லிக்கு உள்ளது.அதேசமயம், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட், அனைத்து ரப்பினரையும் கவரும் விதத்தில், ஜனரஞ்சகமான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்ற சவாலும் அவருக்கு காத்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|