பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
23:41

மும்பை: அன்னிய முதலீடு அதிகரிப்பு, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, முதன் முறையாக, 25,019.51 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வியாபாரத்தில், உலோக நிறுவன பங்குகள் அதிகபட்சமாக, 3.33 சதவீதம் ஏற்றம் கண்டன. இதையடுத்து, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் தலா, 1.96 சதவீதம் அதிகரித்தன.அதேசமயம், வங்கி துறை பங்குகள், 0.39 சதவீதம் சரிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது,213.68 புள்ளிகள் அதிகரித்து, 25,019.51 புள்ளிகளில் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 71.85 புள்ளிகள் உயர்ந்து, 7,474.10 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|