பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
23:47

கோவை: இந்தியாவில், சென்ற 2012ம் ஆண்டில், தனிநபர் ஜவுளி பயன்பாடு, அளவின் அடிப்படையில், 5சதவீதம் உயர்ந்து, 25.93 மீட்டராக அதிகரித்து உள்ளது.இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 24.70 மீட்டராக இருந்தது. மேலும், மதிப்பின் அடிப்படையிலான தனிநபர் ஜவுளி பயன்பாடு, 16 சதவீதம் அதிகரித்து, 2,474 ரூபாயிலிருந்து, 2,863 ரூபாயாக உயர்ந்துஉள்ளது.மதிப்பீட்டு ஆண்டில், ஆண்களுக்கான ஜவுளி பயன்பாடு, 48 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பெண்களுக்கான ஜவுளி பயன்பாடு, 43 சதவீதம் அளவிற்கே உயர்ந்து உள்ளது.
கடந்த 2000 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கிடையில், தனி நபர் ஜவுளி பயன்பாடு மதிப்பின் அடிப்படையில், 79 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.நாட்டின் மொத்த ஜவுளி விற்பனையில், கிராமங்களின் பங்களிப்பு, 62.50 சதவீதமாகவும், நகரங்களின் பங்களிப்பு, 37.50 சதவீதமாகவும் உள்ளன.
இருப்பினும், தனி நபர் ஜவுளி நுகர்வில் கிராமங்களை (23.54 மீட்டர்) காட்டிலும், நகரங்கள் (31.20 மீட்டர்) முன்னிலையில் உள்ளன என, ஜவுளி குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|