பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
23:49

புதுடில்லி: வேளாண் துறை சார்ந்த செய்திகளுக்கென, மத்திய அரசு, பிரத்யேக ‘டிவி சேனல் ஒன்றை துவக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், விவசாய பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பட்ஜெட் தயாரிப்பிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நேற்று, விவசாய துறை பிரதிநிதிகளுடன் துவக்கினார்.இதில், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், கேசவதாஸ் உள்ளிட்டோருடன், பல்வேறு விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அவற்றில், வேளாண் செய்திகளுக்கு பிரத்யேக ‘டிவி’ சேனல், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, கால தாமதமின்றி அறிவிக்க வேண்டும், வேளாண் பொருட்களுக்கு துறை வாரியான வாரியம், நீர் பாசன திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.இதையடுத்து அருண் ஜெட்லி பேசியதாவது:கடந்த ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது.
முன்னுரிமை: வேளாண் துறை பிரச்னைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், அரசு தீர்வு காணும். தற்போது, நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள போதிலும், வேளாண் துறையை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல, இயன்றவரை முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மத்திய பட்ஜெட் வரும் ஜூலை முதல் வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|