பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
23:53

மும்பை :வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில், மும்முரம் காட்டி வருகின்றன.கடந்த ஏப்ரலில், இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன், 17.1 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு, 5,45,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், வங்கிகள், நிறுவனங்களுக்கு வழங்கிய கடன், 12.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, 25,14,000 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்தாண்டின் இதே மாதத்தில், இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன், 22,39,000 கோடி ரூபாய் (15.6 சதவீதம் வளர்ச்சி) என்ற அளவில் இருந்தது.இதில், பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், 11.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 20,31,900 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இப்பிரிவின் கடன் வளர்ச்சி, 15.7 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. வங்கிகள், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன், 23 சதவீதத்திலிருந்து, 21.2 சதவீதமாக குறைந்து, 3,56,800 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேற்கண்டவை தவிர, வங்கிகள் வழங்கிய சில்லரை கடனும், 15.6 சதவீதத்திலிருந்து, 14.5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.அதேசமயம், கடந்த ஏப்ரலில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 14.2 சதவீதம் அதிகரித்து, 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.மேலும், சேவை துறைக்கு வழங்கிய கடன், 11,40,400 கோடியிலிருந்து, 13,34,800 கோடியாகவும், தனிநபர் கடன், 9.08 லட்சத்திலிருந்து, 10.39 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.இது தவிர, வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடன், 18,61,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|