பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:11

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாத காலத்தில் (ஏப்., – மே), நாட்டின் உருக்கு பயன்பாடு, 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.26 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1.25 கோடி டன்னாக இருந்தது என, உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு துறைகளில், மத்திய அரசின் செலவினம் மிகவும் குறைந்ததால், உருக்கு பயன்பாடு மேலும் உயராமல் உள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த உருக்கு தேவையில், கட்டுமானம் மற்றும் மோட்டார் வாகனத் துறையின் பங்களிப்பு முறையே, 60 சதவீதம் மற்றும் 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி, 1.9 சதவீதம் அதிகரித்து, 1.49 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், இதன் ஏற்றுமதி, 21.2 சதவீதம் உயர்ந்து, 9.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் இதன் ஏற்றுமதி, 5.30 லட்சம் டன்னாக உள்ளது.கணக்கீட்டு காலத்தில், உருக்கு இறக்குமதி, 18.2 சதவீதம் அதிகரித்து, 10.60 லட்சம் டன்னாக உள்ளது என, உருக்கு அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. கடந்த 2013 – 14ம் நிதிஆண்டில், உருக்கு பயன்பாடு, 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 7.39 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|