பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:15

புதுடில்லி:காப்பீட்டு துறையில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) உள்ளிட்ட அன்னிய முதலீட்டாளர்கள், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, நேரடியாக முதலீடு செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன், காப்பீட்டு நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு மட்டுமே இத்தகைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.தற்போது, காப்பீட்டு துறையில் தரகு சேவை நிறுவனங்கள், மூன்றாம் நபர் நிர்வாகங்கள், சர்வேயர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நேரடியாக 26 சதவீத அன்னிய முதலீடுகள் மேற்கொள்ள முடியும்.அன்னிய நிதி நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர் ஆகியோர், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, மேற்கண்ட காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
அதே சமயம், அது, ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில், 26 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.எனினும், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடம் (இரிடா), முதலீடு தொடர்பான தகவல்களை அளித்து, உரிய உரிமம் பெறுவோர் மட்டுமே காப்பீட்டு துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.இதன் மூலம், காப்பீட்டு துறையில், அன்னிய முதலீடுகளில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, அன்னியச் செலாவணி வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|