பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:19

புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), தோட்டப் பயிர்கள் உற்பத்தி, சாதனை அளவாக, 28.07 கோடி டன்னை எட்டும் என, மத்திய வேளாண் அமைச்சக புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
வெங்காயம்:இதனால், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரி, ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட, தோட்டப் பயிர்களின் விலை கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு பருவத்தில், தோட்டப் பயிர்கள் பயிரிடும் பரப்பு, 2.53 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தில், 2.37 கோடி ஹெக்டேராக இருந்தது.பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளதால், இதே காலத்தில், தோட்டப் பயிர்கள் உற்பத்தி, 26.88 கோடி டன்னிலிருந்து, 28.07 கோடி டன்னாக உயர்ந்து, சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த தோட்டப் பயிர்கள் உற்பத்தியில், உருளைக் கிழங்கின் பங்களிப்பு, 16.5 சதவீதமாக உள்ளது. நடப்பு பருவத்தில் இதன் பயிரிடும் பரப்பளவு, 1.99 கோடியிலிருந்து, 2.02 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது.இதனால், உருளைக்கிழங்கு உற்பத்தி, 4.53 கோடியில்இருந்து, 4.64 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உருளைகிழங்கு:சென்ற நவம்பர்–டிசம்பர் மாதங்களில், பருவம் தவறிய மழையால், உருளை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ, 30 ரூபாயாக உயர்ந்தது.
தக்காளி:நாட்டின் தோட்டப் பயிர் உற்பத்தியில், 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, வாழைப்பழத்தின் உற்பத்தி, நடப்பு பருவத்தில், 2.65 கோடியிலிருந்து, 2.76 கோடி டன்னாக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கத்திரிக்காய்: உற்பத்தி, 1.34 கோடியிலிருந்து, 1.39 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தெரிகிறது.வெங்காயம் பயிரிடும் பரப்பளவு, 1.05 கோடியிலிருந்து, 1.22 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளதால், அதன் உற்பத்தி, 1.68 கோடி டன்னில் இருந்து, சாதனை அளவாக, 1.93 கோடி டன்னை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில் தான், முதன் முறையாக, வெங்காயத்தை விட, தக்காளி உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தக்காளி உற்பத்தி, 1.82 கோடியிலிருந்து, 1.91 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
தேங்காய்:மேலும், பூ, தேங்காய், பாக்கு ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கோகோ, முந்திரி ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது.நடப்பு பருவத்தில், மிளகாய் வற்றல், ஏலக்காய், மஞ்சள் உள்ளிட்ட நறுமணப் பொருட்களின் உற்பத்தி, 57 லட்சம் டன்னிலிருந்து, 58 லட்சம் டன்னாக உயரும்.அதேசமயம், மிளகு, பூண்டு, தனியா ஆகியவற்றின் உற்பத்தி, சிறிதளவு குறையும் என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|