பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
12:58

புதுடில்லி : பொருளாதாரத்தை உயர்த்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மோடியின் புதிய அரசு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள், புதிய எம்.பி.க்களும் பதவியேற்றுள்ளனர். புதிய அரசு ஆட்சி அமைத்த பின்னர், பார்லியின் இரு அவைகளின் கூட்டுகூட்டம் இன்று நடந்தது. முதலாவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மோடி அரசு செய்ய இருக்கும் திட்டங்களை உரையாக நிகழ்த்தினார்.
இதில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவற்காக மோடி அரசு செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள்...
* வறுமை ஒழிப்பு, பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை.
* பாரம்பரியம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம்(டிரடிசன், டேலன்ட், டூரிசம், டிரேடு மற்றும் டெக்னாலஜி) போன்ற 5டி துறைகளுக்கு முன்னுரிமை.
* விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு.
* சிறிய அரசு, சிறந்த நிர்வாகம்.
* அனைத்து மாநிலங்களிலும் ஐஐடி மற்றும் ஐஐஎம்.
* கிழக்கு மாநிலங்களை மேம்படுத்த நடவடிக்கை
* மின்சாரம் மற்றும் எரிசக்தியை மேம்படுத்த நடவடிக்கை
* அதிவிரைவு ரயில் மற்றும் ரயில்வே துறையை மேம்படுத்துதல்.
* சிறிய நகரங்களை இணைக்க குறைந்த கட்டணத்தில் விமான சேவை மற்றும் சிறிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை.
* மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர நடவடிக்கை.
* தேசிய சோலார் மின்உற்பத்தி திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை.
* வேலைவாய்ப்பை உருவாக்க துரித நடவடிக்கை.
* அந்நிய முதலீட்டை அதிகரித்து வேலை வாய்பை உருவாக்க நடவடிக்கை.
* உலகதரத்தில் பிரத்யேக சரக்கு முனையங்கள் மற்றும் தொழில்துறை முனையங்கள் அமைக்க முதலீடு.
* கள்ள சந்தையை ஒழிக்க நடவடிக்கை.
* பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு.
* அதிவிரைவு ரயிலுக்கான வைர நாற்கரத்திட்டம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|