பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
17:01

மும்பை : சென்செக்ஸ் 25,500 புள்ளிகளையும், நிப்டி 7,600 புள்ளிகளையும் தாண்டி வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பங்குசந்தைகளில் அதிரடி தொடர்ந்து வந்த நிலையில், மோடி அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்து, பார்லியின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதன்விளைவாக துவக்கத்திலேயே ஏற்றம் பெற்ற இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க ஏற்றத்திலேயே முடிந்தன. அதில் நிப்டி 7600 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 183.75 புள்ளிகள் உயர்ந்து 25,580.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 7,654.60-ஆகவும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை வர்த்தகமாகின. 3,167 பங்குகளில் 2300 பங்குகள் உயர்ந்து இருந்தன. அதிலும் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எல்அண்ட்டி., போன்ற பங்குகள் அதிக லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|