பதிவு செய்த நாள்
10 ஜூன்2014
00:16

கொச்சி: உள்நாட்டில் இயற்கை ரப்பர் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ள தால், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென, கேரள தோட்டப்பயிர் விவசாயி கள் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டுடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு சந்தைகளில், ஷீட் ரப்பர் மற்றும் பிளாக் ரப்பர் ஆகியவற்றின் விலை குறைவாக உள்ளது.வித்தியாசம்:இவற்றிற்கிடையேயான விலை வித்தியாசம் முறையே, கிலோவுக்கு, 30–35 ரூபாய் மற்றும் 17–18 ரூபாய் என்ற அளவில் உள்ளது. எனவே தான், இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. சென்ற மே மாதத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 64 சதவீதம் அதிகரித்து, 34,419 டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 20,948 டன்னாக இருந்தது. சென்ற மே மாதத்தில், உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி, 10.2 சதவீதம் சரிவடைந்து, 59 ஆயிரம் டன்னிலிருந்து, 53 ஆயிரம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், இதன் பயன்பாடு, 81,325 டன்னிலிருந்து, 83,500 டன்னாக அதிகரித்துள்ளது.கடந்த 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 49 சதவீதம் உயர்ந்து, 3.24 லட்சம் டன்னாக அதிகரித்திருந்தது.இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில், 2.17 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.இறக்குமதி செய்யப்படும் ரப்பரில், 95 சதவீதம் டயர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகள்இந்நிலையில், இயற்கை ரப்பர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என, கேரள தோட்டப்பயிர் விவசாயிகள் கூட்ட மைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், ரப்பர் விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ரப்பர் பயன்படுத்தும் நிறுவனங்கள், தாராளமாக இயற்கை ரப்பரை இறக்குமதி செய்து வருவதால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகள், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர். இயற்கை ரப்பர் விவசாயத்தை கைவிட்டு, மாற்று திட்டங்களை மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.சுங்க வரியை உயர்த்தினால், இயற்கை ரப்பர் இறக்குமதி குறையும்.
சந்தை:கோட்டயம் சந்தையில், நடப்பாண்டு, ஜன.,–ஏப்., வரையிலான, 101 வர்த்தக நாட்களில், 37 நாட்கள் மட்டுமே, ரப்பர் மீதான வர்த்தகம் ஓரளவிற்கு இருந்தது. ரப்பர் வாரியம் வெளியிடும் புள்ளி விவரத்தின் நம்பகத் தன்மையிலும் ஐயப்பாடு உள்ளது. இயற்கை ரப்பர் கொள்முதல் குறித்த புள்ளி விவரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஏற்றுமதியில் சரிவு:சென்ற மே மாதத்தில், இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 185 டன்னிலிருந்து, வெறும் 11 டன்னாக சரிவடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ரப்பரில், 95 சதவீதம் டயர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியா, அதிகளவில் ரப்பர் இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|