இன்­போ­சிஸ் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா நியமனம்இன்­போ­சிஸ் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா நியமனம் ... ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - ரூ.59.77 ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - ரூ.59.77 ...
விலை சரிவால் நகை விற்­பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2014
01:48

தங்கம் விலை குறைந்­துள்­ளதால், நடப்பு ஜூன் மாதம் தற்­போது வரை, நகை விற்­பனை, கடந்த ஆண்டு, இதே காலத்தை விட, 40 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது. இதனை, இந்­திய நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் வர்த்­தக கூட்­ட­மைப்பின் (ஏ.ஐ.ஜி.ஜே.டி.எப்.,) துணை தலைவர் மனிஷ் ஜெயின், சென்­னையில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:ரிசர்வ் வங்கி, அண்­மையில் தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டு­களை சற்று தளர்த்­தி­யது. இதனால், 10 கிராம் தங்­கத்­திற்­கான, உயர் மதிப்பு, 1,500 ரூபாயில் இருந்து, 500 ரூபா­யாக குறைந்­துஉள்­ளது. இதன் கார­ண­மாக, தங்க நகை விற்­பனை சூடு பிடித்­துள்­ளது.கடந்த ஆண்டு மத்­தியில், தங்கம் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களால், தங்கம் கடத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது. இது, இத்­து­றைக்கு மிகப் பெரிய சவா­லாக உள்­ளது.கடந்த ஓராண்டில், இந்­தி­யாவில் குவிந்த கடத்தல் தங்­கத்தின் மதிப்பு, முந்­தைய 10 ஆண்­டு­களில் கடத்­தப்­பட்ட தங்­கத்­திற்கு நிக­ராகும். முன்பு, கடத்தல் புள்­ளிகள், தங்க கட்­டி­களை தான் கொண்டு வரு­வர்.
தற்­போது, தங்க நகை­க­ளையும் கடத்தி வரத் துவங்­கி­ உள்­ளனர். இது, உள்­நாட்டு நகை நிறு­வ­னங்­களை பாதிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.ஏ.ஐ.ஜி.ஜே.டி.எப்., பிராந்­திய தலைவர் என்.அனந்த பத்­ம­நாபன் கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 10 கிராம், 22 காரட் ஆப­ரண தங்கம் விலை, 29 ஆயிரம் ரூபா­யாக இருந்­தது. இது, கடந்த மே மாதம், 28,500 ரூபா­யாக குறைந்து, தற்­போது, 25,330 ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.நகை கடைக்­கா­ரர்­க­ளுக்கு தேவைக்­கேற்ப தங்கம் கிடைப்­பது சிர­ம­மாக உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.
மத்­திய பட்­ஜெட்டில், தங்கம் மீதான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்டால், தங்க நகை­களின் விற்­பனை மேலும் உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.8 குறைவு:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, எட்டு ரூபாய் குறைந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,546 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,368 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,230 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.
இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 2,545 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சவ­ர­னுக்கு, எட்டு ரூபாய் சரி­வ­டைந்து, 20,360 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. 10 கிராம் சுத்த தங்கம், 10 ரூபாய் குறைந்து, 27,220 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.ஒரு கிராம் வெள்ளி, 44 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,125 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது.
–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)