பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
00:27
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 296 ரூபாய் உயர்ந்தது.சர்வதேச நிலவரங்களால், கடந்த ஒரு மாதமாகக் குறைந்திருந்த, தங்க ஆபரணங்கள் விலை, நேற்று, அதிரடியாக உயர்ந்தது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,545 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,220 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 37 ரூபாய் உயர்ந்து, 2,582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 296 ரூபாய் அதிகரித்து, 20,656 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 390 ரூபாய் உயர்ந்து, 27,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,090 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|