பதிவு செய்த நாள்
16 ஜூன்2014
01:10
புதுடில்லி:மத்திய வருவாய் துறை செயலராக, சக்திகாந்த தாஸ், 57, நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த, ராஜீவ் தாக்ரூ, வடகிழக்கு பிராந்திய துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது, உரத் துறை செயலராக உள்ள சக்தி காந்த தாஸ், இதற்கு முன், பொருளாதார விவகாரங் கள் துறையின் சிறப்பு செயலராக பணியாற்றியவர். இவர், இன்று அல்லது நாளை பொறுப்பேற்பார் என, தெரிகிறது.பிரதமர் நரேந்திர மோடி அரசு சமர்ப்பிக்கவுள்ள முதல் பட்ஜெட் தயாரிப்பில், நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அமைச்சத்தின் கீழ், தற்போது, நிதித் துறை செயலர் அர்விந்த் மயராம், செலவின துறை செயலர் ஆர்.பி.வாட்டல், பங்கு விலக்கல் துறை செயலர் ரவி மாத்துார், நிதி சேவைகள் துறை செயலர் ஜி.எஸ்.சாந்து ஆகியோர் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|