பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
00:50
மும்பை:சென்ற ஏப்ரலில், சேவைகள் ஏற்றுமதி, 81,780 கோடி ரூபாயாக (1,363 கோடி டாலர்) குறைந்துள்ளது.இது, முந்தைய மார்ச்சில், 85,920 கோடி ரூபாயாக (1,432 கோடி டாலர்) சற்று அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், சேவை துறை இறக்குமதி, 50,940 கோடியிலிருந்து (849 கோடி டாலர்), 48,360 கோடி ரூபாயாக (806 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.சென்ற முழு நிதியாண்டில், சேவைகள் ஏற்றுமதி, 16,701 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், இதன் இறக்குமதி, 8,819 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது. இத்துறையின் ஏற்றுமதி, இறக்குமதி விவரங்களை, ரிசர்வ் வங்கி, 45 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|