முட்டை விலை 331 காசாக உயர்வுமுட்டை விலை 331 காசாக உயர்வு ... ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளி­யீட்டில் பொது­மக்­க­ளுக்கு 25 சத­வீதம்: ‘செபி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2014
00:56

புது­டில்லி:புதிய பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்கும் நிறு­வ­னங்கள், குறைந்­த­பட்சம், 25 சத­வீதம் அல்­லது 400 கோடி ரூபாய், இதில் எது குறைவோ அதை பொது­மக்­க­ளுக்கு ஒதுக்க வேண்டும் என, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான ‘செபி’ தெரி­வித்­துள்­ளது.
ஊக்குவிப்பு:டெல்­லியில் ‘செபி’யின் நிர்­வாக குழு கூட்டம் நேற்று கூடி­யது. இதில், மூல­தனச் சந்­தையை ஊக்­கு­விக்கும் வகையில் பல்­வேறு முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன.இதுகுறித்த அறிக்கை விவரம் வரு­மாறு:பங்கு வெளி­யீடு மேற்­கொள்ளும் அனைத்து நிறு­வனங்­களும், அவ்­வெ­ளி­யீட்­டிற்கு பிந்­தைய, சந்தை மூல­தனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேற்­படும் பட்­சத்தில், அவை கண்­டிப்­பாக, அவ்­வெ­ளி­யீட்டில், 10 சத­வீ­தத்தை பொது­மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
மேற்­கண்ட தொகைக்கு (ரூ.4000 கோடி) குறை­வான சந்தை மூல­தனம் கொண்ட நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டில், குறைந்­த­பட்சம் 25 சத­வீதம் அல்­லது 400 கோடி ரூபாய்க்கு பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை ஒதுக்க வேண்டும்.குளறுபடி:இதனால், 4,000 கோடி ரூபாய்க்கு குறை­வான, சந்தை மூல­த­னத்தை கொண்ட நிறு­வ­னங்கள், 1,000 கோடி ரூபாய்க்கு பங்கு ஒதுக்­கீடு செய்­வதும்; 4,000 கோடி ரூபாய் சந்தை மூல­த­னத்தை கொண்ட நிறு­வ­னங்கள், வெறும், 400 கோடி ரூபாய்க்கு பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை ஒதுக்­கீடு செய்யும் குள­று­ப­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும்.
அவகாசம்:புதிய பங்கு வெளி­யீட்டில், பொது­மக்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 25 சத­வீத பங்­கு­களை ஒதுக்க முடி­யாத சூழல் உரு­வாகும் பட்­சத்தில், சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்கள், மூன்று ஆண்­டு­க­ளுக்குள், அதை நிறை­வேற்ற அவ­காசம் அளிக்­கப்­படும்.பொதுத் துறை நிறு­வ­னங்கள், கண்­டிப்­பாக, 25 சத­வீத பங்­கு­களை, பொது­மக்­க­ளுக்கு ஒதுக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாத பட்­சத்தில், மூன்று ஆண்­டு­க­ளுக்குள் அத்­த­கைய நிலையை எட்ட வேண்டும்.
சிறிய நிறுவனங்கள்ஓராண்­டிற்குள் வழங்­கப்­பட்ட இல­வச பங்­கு­க­ளையும், புதிய பங்கு வெளி­யீட்டில் விற்­பனை செய்ய அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது.இவ்­வாறு அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.‘செபி’யின் நட­வ­டிக்­கைகள் மூலம், சிறிய நிறு­வ­னங்­களும், புதிய பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள வழி பிறந்­துள்­ளது என, பங்குத் தரகு நிறு­வ­னத்தை சேர்ந்த ஒருவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)