பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:37
மும்பை,:நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10 காசுகள் குறைந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 60.09ஆக இருந்தது. நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.22 ஆக காணப்பட்டது. இந்த மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 60.33 வரை சென்றது.
வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.17 சதவீதம் (10 காசுகள்) சரிவடைந்து, 60.19ல் நிலை கொண்டது.ஈராக் கலவரம் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கான டாலர் தேவை அதிகரித்துள்ளது. இதனால், டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.இருந்தபோதிலும், நடப்பாண்டில், இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|