பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:40

பருவமழை பொழிவு தாமதம் காரணமாக, நாடு முழுவதும் விவசாயிகள், கரீப் பருவ பயிர்களின் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.நெல், நிலக்கடலை, சோளம், உள்ளிட்ட கரீப் பயிர்களில், குறிப்பாக, வெங்காயத்திற்கான நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுணக்கம்: வெங்காயம் அதிகம் விளையும் கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், வழக்கத்தை விட, பருவ மழை, சில வாரங்கள் தள்ளிப் போயுள்ளது.இதனால், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பயிர்களின் சாகுபடியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய தோட்டப் பயிர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பின் (என்.எச். ஆர்.டீ.,) இயக்குனர் ஆர்.பி.குப்தா கூறியதாவது:கரீப் பருவத்தில், வெங்காயம் சாகுபடி செய்யும் மாநிலங்களில், வழக்கமாக ஜூன் துவக்கத்தில், பருவ மழை பெய்யும். ஆனால், மூன்று வாரங்கள் கடந்த பின்னரும், பருவ மழை பெய்யவில்லை.
மழைக்காக, விவசாயிகள் நடவுப் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். சாகுபடி தாமதமானால், சந்தைக்கு வெங்காயம் வருவது, அக்., முதல் நவ., மாதம் வரை தள்ளிப் போகும். இத்துடன், போதுமான அளவில், தரமான வெங்காய விதைகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கையிருப்பு: கரீப் பருவ துவக்கத்தில், 39 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில் இருந்ததை விட, 80 சதவீதம் அதிகமாகும். ஒரு மாதத்திற்கு, வெங்காயத்திற்கான தேவை, 12 லட்சம் டன்னாக உள்ளது. இதனால், தற்போது கையிருப்பில் உள்ள வெங்காயம், மூன்று மாத தேவைக்கு போதுமானதாக இருக்கும் என, என்.எச்.ஆர்.டீ., கணித்துஉள்ளது. ‘
‘எனினும், பற்றாக்குறை காரணமாக, வெங்காயம் விலை உயர்ந்தால், மத்திய அரசு தாமதிக்காமல் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்து, அதை இறக்குமதி செய்ய வேண்டும்’’ என, குப்தா மேலும் கூறினார்.
இந்திய தோட்டப் பயிர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜித் ஷா, ‘‘இந்தியாவை விட, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில், வெங்காயம் விலை குறைவாக உள்ளதால், அதன் இறக்குமதியால் உள்நாட்டில் விலை உயர வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.நடப்பு 2013–14ம் வேளாண் பருவத்தில் (ஜூலை–ஜூன்), இந்தியாவின் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு உற்பத்தி முறையே, 1.93 கோடி டன் மற்றும், 4.63 கோடி டன்னாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|