பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:44

புதுடில்லி:வரும் 2022–23ம் நிதிஆண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, தற்போதைய, 7.20 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (12,000 கோடி டாலர்), 13.80 லட்சம் கோடி ரூபாயாக (23,000 கோடி டாலர்) உயரும் என, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
செலவு:இது குறித்து ஆய்வறிக்கை விவரம் வருமாறு:இந்தியா, எரிசக்தி தேவைக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. சென்ற 2013–14ம் நிதிஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கச்சா எண்ணெய்க்கான நிகர இறக்குமதி செலவினம், 6.3 சதவீதமாக உள்ளது.விரைவான நகர்மயம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரிப்பால், அடுத்த பத்து ஆண்டுகளில், எரிபொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும்.
இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை வெகுவாக குறைக்க முடியும். இந்திய எரிபொருள் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டால், வரும் 2022–23ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தில், 4,000 கோடி டாலர் குறையும்.இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், தற்போதைய 6.3 சதவீதத்திலிருந்து, 4 சதவீதமாக குறையும்.
சேமிப்பு:அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி திறன், 15 சதவீதம் உயர்ந்தால், ஆண்டுக்கு, 3,200 கோடி டாலர் மிச்சமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|