பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:45

அன்னிய முதலீட்டாளர்களின், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, மீண்டும், கடந்த மே மாதம் அதிகரித்து உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி), பதிவு செய்து கொள்ளாத அன்னிய முதலீட்டாளர்கள், அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களின் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய நிதிச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த வகையில், கடந்த மே மாதம் பங்குகள், கடன் பத்திரங்கள், முன்பேர வர்த்தகம் உள்ளிட்டவற்றில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 24,254 கோடி ரூபாய் அதிகரித்து, 2,11,740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்களின் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 15,735 கோடி அதிகரித்து, 1,18,093 கோடியில் இருந்து, 1,33,828 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் பத்திரங்களில் செய்த முதலீடு, 1,895 கோடி அதிகரித்து, 9,535 கோடியில் இருந்து, 11,430 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பேர வர்த்தம் சார்ந்த முதலீடு, 6,624 கோடி அதிகரித்து, 59,858 கோடியில் இருந்து, 66,482 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த ஏப்ரலில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, தொய்வை கண்ட நிலையில், மத்தியில் புதிய அரசு அமைந்ததை அடுத்து, சென்ற மே மாதம் அதிகரித்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|