பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:50

மும்பை: நடப்பு நிதியாண்டில், தமிழகத்தின் சிமென்ட் தேவை, 4 – 5 சதவீதம் வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக, கார்வி புரோக்கிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதன் ஆய்வறிக்கை விவரம் வருமாறு:தமிழகத்தின், சிமென்ட் தேவை ஆண்டுக்கு, 2 கோடி டன் என்ற அளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், தமிழகத்தின் சிமென்ட் தேவை, 4 சதவீதம் சரிவடைந்தது. இது, நடப்பு நிதியாண்டில், ரியல் எஸ்டேட் துறை எழுச்சி காணும்பட்சத்தில், 4 – 5 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திராவில், வலுவான அரசு அமைந்துள்ளதால், முடங்கியிருந்த மற்றும் புதிய கட்டுமான திட்டங்கள், முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், அம்மாநிலத்தில், சிமென்டிற்கான தேவை, 10 – 12 சதவீதம் அதிகரிக்கும். கடந்த நிதியாண்டில், இதற்கான தேவை, 6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது.ஆந்திராவின் சிமென்ட் தேவை, ஆண்டுக்கு, 2.10 கோடி டன்னாக உள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் சிமென்ட் தேவை, ஆண்டுக்கு முறையே, 1.60 கோடி டன் மற்றும் 1 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் முறையே, 3 – 5 சதவீதம் மற்றும் 8 – 10 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மொத்தத்தில், நடப்பு நிதியாண்டில், தென் மாநிலங்களில், சிமென்டிற்கான தேவை, 5 – 7 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|