தங்கம் விலை ரூ.16 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.16 உயர்ந்தது ... பூச்சி தாக்­கு­தலால் அர­பிகா காபி பயிர் பாதிப்பு:உற்­பத்­தியில் இது­வரை இல்­லாத வீழ்ச்சி பூச்சி தாக்­கு­தலால் அர­பிகா காபி பயிர் பாதிப்பு:உற்­பத்­தியில் இது­வரை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அளவும் பெரிது ; ஆளுமையும் பெரிது - இசுசூ எம்யு-7 ஒரு பார்வை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
13:40

ஜப்பானிய நிறுவனமான இசுசூ பயணியர் கார், வணிக வாகனம் மற்றும் கனரக சரக்கு வாகன உற்பத்தியில் பெயர் போனதாகும். இந்தியாவில் இசுசூ கொண்டு வந்திருக்கம் இசுசூ எம்யு 7 என்ற எஸ்யுவி மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகிறது. சோதனை ஓட்டத்தின் போது, சாலையில் செல்வோரின் கவனத்தை முழுவதுமாய் தன்புறம் திருப்பும் அளவிற்கு இதன் அளவும் தோற்றமும் உள்ளது.
இசுசூ எம்யு–7 2515 கிலோ எடையுடன், 4955 மிமி நீளமும் கொண்டு மிகவும் பெரிய காராக தெரிகிறது. பக்கவாட்டில் பார்க்கையில் மிகவும் நீளமாக தெரிவதுடன், போர்ஸ் ஒன், டொயோட்டா பார்சூனர் போன்றவைகளை சிறியதாக தெரியுமளவிற்கு இருக்கிறது இதன் தோற்றம். இதன் வெளிப்புறம் போலவே இதன் உட்புறமும் தாராள இடவசதியுடன், மிகவும் எளிமையான புராதன தோற்றத்துடன் காணப்படுகிறது. உட்புறத்தில் உயர்ரக தோலினால் ஆன இருக்கைகளும, அட்டகாசமான மியூசிக் சிஸ்டமும், பின்புறம் உள்ளவர்களுக்கான திரைகளும் பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் திருப்திகரமாக உணரச்செய்கிறது.
இதன் வீல் பேஸ் 3050 மிமி என்பதால் கால்கள் வைப்பதற்கும் தலை மற்றும் தோள்களுக்கான இடவசதி தாராளமாக உள்ளது. மூன்றாவது வரிசையும் போதுமான இடவசதியுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுகமாக, சொகுசாக பிரயாணிக்கும் விதத்தில் ஸ்டைலைப்பற்றி கவலைப்படாமல் வசதியை பற்றி பெரிதும் கவனித்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது இதன் உட்புறம். கடினமான, உறுதியான கட்டமைப்பிற்கு பெயர் போனது இசுசூ என்ஜின்கள். இதன் டீசல் இன்ஜின் 3,000 சிசி திறன் கொண்ட டர்போ சார்ஜட் ஆகும். இது 3,600 ஆர்பிஎம்மில் 163 பிஎஸ் சக்தியையும் 360 என் எம் இழுவிசையையும் அளிக்கிறது.
இதன் எடை அதிகமென்றாலும், செயல்திறன் சிறப்பாகவே இருக்கிறது. 0–100 கிலோமீட்டர் வேகத்தை 10.7 நொடியில் அடைவதுடன் அதிகபட்சமாக 175 கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகத்தை அடைகிறது. இதன் 5 வேக மானுவல் கியர் பாக்ஸ் நெடுஞ்சாலைகளிலும் கரடுமரடான சாலைகளிலும் அனாயாசமாக செல்ல உதவுகிறது. இதன் டபிள் விஷ்போன் முன்புற சஸ்பென்ஷனும், பின்புற லீப் ஸ்ப்ரிங் – பேண்ட் சஸ்பென்ஷனும் இணைந்து கரடுமுரடான சாலைகளில் குண்டு குழிகளை சுகமாய் கடக்கிறது. ஆனால், அதிக வேகத்தில் குலுக்கல் கொஞ்சம் கஷ்டமாக இருப்பதையும் தவிர்க்க முடியவில்லை.
பெரிய குடும்பங்களுக்கேற்ற பெரிய அளவும், பயணிகள் மற்றும் பொருட்களுக்கான தாராள இடவசதியும், கம்பீரமான தோற்றமும் இசுசூ எம்யு–7 ஐ ஒரு உண்மையான எஸ்யுவியாக எடுத்து காட்டுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)