தங்கம் விலை ரூ.24 உயர்வுதங்கம் விலை ரூ.24 உயர்வு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.16 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.16 குறைவு ...
4,000 வார்ப்­பட தொழிற்­சா­லைகள் மூடப்­படும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2014
00:37

இந்­தி­யாவில், 4,000 சிறிய மற்றும் நடுத்­தர வார்ப்­பட தொழிற்­சா­லைகள் மூடப்­படும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மூலப் பொருட்கள் விலை உயர்வால், வார்ப்­படத் துறை கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நுகர்வோர் சாத­னங்­களில், வார்ப்­பட பொருட்கள் அதிகம் இடம் பெறு­கின்­றன.பண­வீக்கம்:பண­வீக்கம் கார­ண­மாக, நுகர்வோர் சாத­னங்­களின் விற்­பனை சரி­வ­டைந்­துள்­ளதால், அவற்றை தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, வார்ப்­பட பொருட்­ க­ளுக்­கான தேவை குறைந்­துள்­ளது.ஏற்­க­னவே, மூலப் பொருட்கள் விலை உயர்வை, வார்ப்­பட பொருட்கள் மீது சுமத்த முடி­யாமல் வார்ப்­பட நிறு­வ­னங்கள் தவித்து வரு­கின்­றன.
இந்­நி­லையில், வார்ப்­ப­டங்­க­ளுக்­கான தேவையும் குறைந்­துள்­ளதால், வார்ப்­பட நிறு­வ­னங்கள் கடும் நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ளன. குறிப்­பாக, சிறிய மற்றும் நடுத்­தர வார்ப்­பட நிறு­வ­னங்கள், மேற்­கொண்டு தொழிலை நடத்த முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளன. இந்­திய வார்ப்­பட துறையில், உலோ­கங்­களை உருக்கி, ஆண்­டுக்கு, 1 கோடி டன் வார்ப்­பட பொருட்­களை தயா­ரிக்கும் தொழிலில், 4,500 நிறு­வ­னங்கள் ஈடு­பட்­டுள்­ளன. அவற்றில், சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை, 85 சத­வீ­த­மாக உள்­ளது. 10 சத­வீத நிறு­வ­னங்கள், உயர் நடுத்­தர பிரி­விலும், எஞ்­சி­யவை, பெரிய தொழிற்­சா­லைகள் என்ற பிரி­விலும் இடம் பெற்­றுள்­ளன.வாகனம்:மொத்த வார்ப்­பட உற்­பத்­தி யில், சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 15 சத­வீ­த­மா­கவும், எஞ்­சிய, 85 சத­வீத பங்­க­ளிப்பை, உயர்நடுத்­தரம் மற்றும் பெரிய தொழிற்­சா­லை­களும் வழங்கி வரு­கின்­றன.கடந்த, 2013–14ம் நிதி­யாண்டில், வாகனம் மற்றும் பொறி­யியல் துறை­களின் மந்­த­நி­லையால், வார்ப்­பட பொருட்­க­ளுக்­கான தேவை குறைந்து, இத்­துறை கடு­மை­யான பாதிப்­பிற்கு ஆளா­னது.
இது­கு­றித்து, இந்­திய வார்ப்­பட நிறு­வ­னங்கள் மையத்தின் (ஐ.ஐ.எப்.,) இயக்­குனர் ஏ.கே.ஆனந்த் கூறி­ய­தா­வது:நுகர்வோர் சாத­னங்கள் துறையின் தேவை குறைந்­துள்­ளதால், சிறிய மற்றும் நடுத்­தர வார்ப்­பட நிறு­வ­னங்கள் கடும் நிதி நெருக்­க­டிக்கு ஆளா­கி­உள்­ளன. அவை, தொடர்ந்து செயல்­பட, அரசின் ஆத­ரவை எதிர்­பார்த்­துள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.
அனுமதி:அடிப்­படை கட்­ட­மைப்பு துறையில், பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு அரசு அனு­மதி தரு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால், மின்­சாரம், கட்­டு­மானம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களின் பணிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் தாக்­கத்தால், தேவைப்­பாடு குறைந்து, ஒட்­டு­மொத்த தயா­ரிப்பு துறையை மந்­த­நி­லைக்கு தள்­ளி­யுள்­ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)