மணம்' தராத 'ஜெரேனியம்' சாகுபடி!மணம்' தராத 'ஜெரேனியம்' சாகுபடி! ... அன்னிய செலாவணி கையிருப்புரூ.18.94 லட்சம் கோடியாக உயர்வு அன்னிய செலாவணி கையிருப்புரூ.18.94 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டூவீலர்களுக்கு 50% கூடுதல் மைலேஜ் தரும் நவீன மைலேஜ் பூஸ்டர் மேட்டூரில் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2014
16:22

மேட்டூர்: டூவீலர் மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் மைலேஜை, 50 சதவீதம் அதிகரித்து, பெட்ரோல், டீஸலை மிச்சப்படுத்தும் அதிநவீன மைலேஜ் பூஸ்டர், மேட்டூர், "எனிவேர், எனிடைம்' ஷோரூமில் திறப்பு விழா சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே, பொதுமக்கள், பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை, ரொக்கம் மற்றும் கடனுக்கு வாங்குகின்றனர். டூவீலர்களால், ஏராளமான நன்மைகள் உள்ளது.
எனினும், மாதம்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல் விலையும், எதிர்பார்ப்புக்கு ஏற்ப டூவீலர்கள் மைலேஜ் தராமல் போவதும், டூவீலர் உரிமையாளர்களை விரக்தியில் ஆழ்த்துகிறது. டூவீலர் உரிமையாளர்களின் வேதனையை போக்கும் வகையில், வாகனங்களின் மைலேஜை, 50 சதவீதம் அதிகரிக்கும், நவீன மைலேஜ் பூஸ்டர் கருவி, தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, மேட்டூர், "எனிவேர், எனிடைம்' நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது:
கோவையில், 2011ல் துவங்கிய மைல்மேன் கம்பெனி, நாசாவின் தொழில்நுட்பத்தில் ஹைட்ராக்சி வாயுவை ஆதாரமாக கொண்டு, ஏற்றுமதி தரம் வாய்ந்த அதிநவீன மைலேஜ் பூஸ்டர் சாதனத்தை தயாரித்து சந்தைபடுத்தியுள்ளது. இந்த சாதனம், 4 ஸ்ட்ரோக் வாகனங்களின் மைலேஜை அதிகப்படுத்தி, எரிபொருள், பணத்தை சேமிக்கிறது.
பொதுவாக, வாகனங்களில் போடும் பெட்ரோல், டீஸல், 69 சதவீதம் மட்டுமே எரிக்கப்படுகிறது. மீதமுள்ள, 31 சதவீதம் பெட்ரோல், இன்ஜின் வெப்பத்தாலும், புகையாலும் வீணாகிறது. ஆனால், வாகனங்களில் மைலேஜ் பூஸ்டர் பொருத்தும் பட்சத்தில், அதில் உள்ள ஹைட்ராக்சி வாயு மீதமுள்ள, 31 சதவீத பெட்ரோலை எரித்து அதிக மைலேஜை தருகிறது.
மைலேஜ் பூஸ்டர் டியூப் டூவீலர் ஏர்ஃபில்டர் மூலம் இன்ஜினோடு இணைக்கப்படும். இதன் மூலம் டூவீலர், வழக்கத்தை விட, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 25 கிலோ மீட்டர் கூடுதலாக, மைலேஜ் கொடுக்கும். இந்த மைலேஜ் பூஸ்டரில், 380 மி.லி.,திரவம் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு, 3,000 கிலோ மீட்டருக்கும், இந்த திரவத்தை, ரூ.100 செலவில் டீலரிடம் மாற்றிக் கொள்ளலாம்.
டூவீலர்களில், 350 சி.சி., வரையிலும், நான்கு சக்கர வாகனங்களில், 600 சி.சி., முதல், 2,400 சி.சி., வரையிலும், ஹெவி வாகனங்களில், 2,500 சி.சி.,க்கு மேல் உள்ள வாகனங்களிலும், அதன் சி.சி.,க்கு ஏற்ப பொருத்தும் வகையில், மைலேஜ் பூஸ்டர் விற்பனைக்கு வந்துள்ளது.
மைலேஜ் பூஸ்டர் பொருத்துவதன் மூலம் டூவீலர் இன்ஜின் வெப்பம், 40 சதவீதம் குறைகிறது. இன்ஜின் சத்தம் குறைகிறது. இன்ஜின் பராமரிப்பு செலவு குறைந்து, அதன் ஆயுள் அதிகரிக்கிறது. வெளியேறும் புகையின் அளவு குறைவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாக தடுக்கப்படுகிறது.
எங்கள் ஷோரூமில், 100 சி.சி., முதல், 150 சி.சி., கொண்ட டூவீலர்களுக்கான மைலேஜ் பூஸ்டர், 3,500க்கும், 150 சி.சி.,க்கு மேல் உள்ள டூவீலர்களுக்கான பூஸ்டர், 4,000க்கும், 350 சி.சி.,க்கு மேல் உள்ள டூவீலர்களுக்கான பூஸ்டர், 5,000 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். மேலும், பூஸ்டர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சர்வீஸ் உத்தரவாதமும் உண்டு.
துவக்க விழா சலுகையாக, ஜூலை, 15ம் தேதி வரை பொருத்தும் கட்டணம், ரூ.300 முற்றிலும் இலவசம். தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் டூவீலர்களில் மைலேஜ் பூஸ்டர் பொருத்துவதன் மூலம் உரிமையாளர்கள், 25 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். மைலேஜ் பூஸ்டர் பொருத்தி, 15 நாட்களுக்குள் பலன் கிடைக்கவில்லை என நிரூபித்தால், பணத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)