பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:35
புதுடில்லி:சென்ற மார்ச்சுடன் முடிந்த 2013 – 14ம் நிதிஆண்டில், 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை, 3.2 சதவீதம் குறைந்து, 29,190 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 30,164 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மாதத்தில், ௧௦ கிராம் தங்கம் விலை, 29,329 ரூபாயாகவும், மே மாதத்தில், 28,738 ரூபாயாகவும் குறைந்துள்ளது.இதே போன்று, சென்ற நிதியாண்டில், ஒரு கிலோ வெள்ளியின் விலையும், 19 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 46,637 ரூபாயாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2012 – 13ம் நிதியாண்டில், 57,602 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.சர்வதேச சந்தை நிலவரங்களால், உள்நாட்டில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|