பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:24
புதுடில்லி :மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 5.43 சதவீதமாக குறைந்துள்ளது.இது, முந்தைய மே மாதத்தில், 6.01 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. கடந்தாண்டு ஜூனில் பொது பணவீக்கம், 5.16 சதவீதமாக இருந்தது.
சென்ற ஜூனில், உருளைக்கிழங்கு, வெங்காயம் தவிர்த்து, இதர காய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவடைந்துள்ளதால், பணவீக்கம் குறைந்துள்ளது.காய்கறிகள் விலை, 5.89 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், மொத்த விற்பனையில், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை முறையே, 42.51 சதவீதம் மற்றும் 10.70 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் விலை முறையே, 2.09 சதவீதம் மற்றும் 0.75 சதவீதம் குறைந்துள்ளது.
பழங்கள் (21.40 சதவீதம்), பால் (10.82 சதவீதம்), முட்டை, இறைச்சி, மீன் (10.27 சதவீதம்), அரிசி ( 10.24 சதவீதம்) ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.முக்கிய உணவு தானியங்கள் விலை, 5.33 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பருப்பு வகைகள் விலை, 1.78 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், குளிர் பானங்கள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்களின் விலை, 8.64 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற ஏப்ரல் மாதம், 5.20 சதவீதமாக அறிவிக்கப்பட்ட பொது பணவீக்கம், மறு மதிப்பீட்டில், 5.55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|