பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
10:49
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 15ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.60.18-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.60.12-ஆக முடிந்தது. பணவீக்கம் குறைந்தபோதிலும், உள்நாட்டு பங்குசந்தைகளில் ஏற்றம் தொடர்ந்த போதிலும், உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகம் இருப்பதாலும் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.60.07-ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|