தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.160 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.160 குறைவு ...
ரிலை­யன்­சுக்கு மேலும் ரூ.3,474 கோடி அப­ராதம்:எரி­வாயு உற்­பத்தி குறைவால் அரசு நட­வ­டிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2014
23:55

ஒப்­பந்­தப்­படி எரி­வாயு உற்­பத்தி மேற்­கொள்­ளா­ததால், ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு, மேலும், 57.90 கோடி டாலர் (3,474 கோடி ரூபாய்) அப­ராதம் விதித்­துள்­ளது.
இதன் மூலம், நடப்­பாண்டு மார்ச் இறுதி நில­வ­ரப்­படி, மேற்­கண்ட நிறு­வ­னங்­க­ளுக்கு மொத்தம், 238 கோடி டாலர் (14,280 கோடி ரூபாய்) அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது என, பெட்­ரோ­லியத் துறை அமைச்சர் தர்­மேந்­திர பிரதான் லோக்­ச­பாவில் தெரி­வித்தார்.
இலக்கு: அவர் மேலும் கூறி­ய­தா­வது:ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறு­வ­னங்­க­ளான பிரிட்டிஷ் பெட்­ரோ­லியம் மற்றும் நிக்கோ ரிசோர்சஸ் ஆகி­யவை, கிழக்கு கோதா­வரி படு­கையில்,'கேஜி–டீ6' தொகுப்பில்,ஒப்­பந்­தப்­படி, இயற்கை எரி­வாயு உற்­பத்­திக்­கான இலக்கை எட்ட தவறி விட்­டன.
கடந்த 2011–12ம் நிதி­யாண்டில், இந்­நி­று­வ­னங்கள், தினமும் 6.18 கோடி கன மீட்டர் இயற்கை எரி­வாயு உற்­பத்தி மேற்­கொள்ள வேண்டும் என, ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டது. ஆனால், 3.53 கோடி கன மீட்டர் என்ற அள­விற்கே எரி­வாயு உற்­பத்தி மேற்­கொள்­ளப்­பட்­டது. அது போன்று, 2012–13, 2013–14ம் நிதி­யாண்­டு­க­ளுக்கு, நிர்­ண­யிக்­கப்­பட்ட தலா, 8 கோடி கன மீட்டர் இயற்கை எரி­வாயு உற்­பத்தி இலக்­கையும், இந்­நி­று­வ­னங்கள் எட்­ட­வில்லை.
அந்த இரண்டு நிதி­யாண்­டு­களில், இயற்கை எரி­வாயு உற்­பத்தி, முறையே, 2.08 கோடி கன மீட்டர் மற்றும் 97.70 லட்சம் கன மீட்டர் என்ற அள­விற்கே இருந்­தது. நடப்பு 2014–15ம் நிதி­யாண் டில், சென்ற ஜூன் நில­வ­ரப்­படி, இயற்கை எரி­வாயு உற்­பத்தி, தினமும், 80 லட்சம் கன மீட்டர் என்ற அள­விற்கேஉள்­ளது.
அதனால், மேற்­கண்ட நிறு­வ­னங்­க­ளுக்கு, கடந்த 2013–14ம் நிதி­யாண்­டிற்கு, 57.90 கோடி டாலர் அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. முந்­தைய நிதி­யாண்­டு­க­ளுக்கு இதே போன்று விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்­தையும் சேர்த்து, அந்­நி­று­வ­னங்­க­ளிடம் மொத்தம் 238 கோடி டாலர் அப­ராதம் வசூ­லிக்க வேண்டும்.
இதை­ய­டுத்து, ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வ­னத்தின் 'கேஜி–டீ6' தொகுப்பில் இருந்து, இயற்கை எரி­வாயு, கச்சா எண்ணெய் ஆகி­ய­வற்றை வாங்­கி­ய­தற்­காக தர வேண்­டிய தொகை யில், 11.50 கோடி டாலரை பிடித்தம் செய்து, அரசு கரு­வூல கணக்கில் வரவு வைக்­கு­மாறு, பொதுத் துறையை சேர்ந்த சென்னை பெட்­ரோ­லியம் கார்ப்­ப­ரேஷன் மற்றும் கெயில் நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டு நிறு­வ­னங்கள், தினமும், அதி­க­பட்­ச­மாக, 8 கோடி கன மீட்டர் இயற்கை எரி­வாயு உற்­பத்தி மேற்­கொள்வ­தற்­கான வச­தி­களை, 'கேஜி–டீ6' தொகுப்பில் ஏற்­ப­டுத்தி உள்­ளன.
முறையீடு: ஆனால், துரப்­பண பணிகள் மற்றும் தேவை­யான கிண­றுகள் அமைத்தல் ஆகி­யவை சார்ந்த திட்ட மேம்­பாட்டு செயல்­பா­டு­களை, ஒப்­பந்­தப்­படி செய்­ய­வில்லை. இதை தொடர்ந்து, இயற்கை எரி­வாயு உற்­பத்­தி­யிலும், இலக்கை எட்ட தவறி விட்­டன. இவ்­வாறு அமைச்சர் தெரி­வித்தார்.
இத­னி­டையே, மத்­திய அரசின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து, ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறு­வ­னங்கள், குறை­தீர்ப்­பா­யத்­திடம் முறை­யீடு செய்­துள்­ளன. அதில், புவி­யியல் பிரச்­னைகள் கார­ண­மா­கவே, இயற்கை எரி­வாயு உற்­பத்தி குறைந்­துள்­ள­தாக அவை, தெரி­வித்­துள்­ளன.
லாபத்தில் பங்கு:ரிலையன்ஸ் மற்றும் அதன் இரு கூட்டு நிறு­வ­னங்கள், மத்­திய அர­சுடன் இயற்கை எரி­வாயு உற்­பத்தி சார்ந்த லாப பங்­கீட்டு ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளன. இதன்­படி மொத்த எரி­வாயு விற்­ப­னையில், உற்­பத்தி சார்ந்த செல­வுகள் போக, கிடைக்கும் லாபத்தை அந்­நி­று­வ­னங்கள், அர­சுடன் பகிர்ந்து கொள்­கின்­றன
.–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 15,2014
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)