பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
15:20

புதுடில்லி : ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 10.22 சதவீதம் உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஜூன் மாதத்திற்கான ஏற்றுமதி - இறக்குமதி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் மாதத்தில் ஏற்றமதி 10.22 சதவீதம் உயர்ந்து 26.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேப்போல் இறக்குமதியும் 8.33 சதவீதம் உயர்ந்து 38.24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.76 பில்லியன் டாலராக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் ஏற்றுமதி 24 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 35.3 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஏற்றுமதி 9.31 சதவீதம் உயர்ந்து 80.11 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி 6.92 சதவீதம் குறைந்து 113.19 பில்லியன் டாலராகவும், வர்த்தக பற்றாக்குறை 33.08 பில்லியன் டாலராகவும் இருக்கிறது.
தங்கம் இறக்குமதி அதிகரிப்பு
தங்கம் இறக்குமதியை பொறுத்தமட்டில் 65.13 சதவீதம் உயர்ந்து 3.12 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்தாண்டு இது 1.88 பில்லியன் டாலர் என்ற அளவில் தான் இருந்தது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|