பதிவு செய்த நாள்
17 ஜூலை2014
00:03

புதுடில்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து, பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு, தற்போது, 2.49 ரூபாயாக குறைந்துள்ளது.
நடப்பு ஜூலை மாதத்தின் முதல் 15 தினங்களில், இந்த இழப்பு, இரண்டு மடங்கு உயர்ந்து, 3.40 ரூபாயாக காணப்பட்டது.எண்ணெய் நிறுவனங்களுக்கு, தற்போது, பொது வினியோக திட்டத்திற்கான ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில், 33.07 ரூபாயும், ஒரு சிலிண்டர் எரிவாயு விற்பனையில், 449.17 ரூபாயும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து,மேற்கண்டவற்றின் விற்பனை வாயிலாக,தற்போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, 261 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இது, முன்பு, 271 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, மேற்கண்டவற்றின் விற்பனை வாயிலாக ஏற்படும் வருவாய் இழப்பு, 91,665 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற நிதியாண்டில், 1,39,869 கோடி ரூபாயாக இருந்தது.கச்சா எண்ணெய் விலை சரிவை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், நேற்று முன்தினம், ரயில்வே, ராணுவம் மற்றும் மாநில போக்குவரத்து கழகங்களின் மொத்த கொள்முதலுக்கான டீசல் விலையை லிட்டருக்கு, 1.09 ரூபாயை குறைத்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|