பதிவு செய்த நாள்
17 ஜூலை2014
00:07

புதுடில்லி, :நாட்டின் பாமாயில் இறக்குமதி, சென்ற ஜூன் மாதத்தில், 5,98,247 டன்னை எட்டியுள்ளது. இது,நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இறக்குமதியாகும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
பங்களிப்பு: கடந்த மே மற்றும் சென்ற ஆண்டு ஜூனில் பாமாயில் இறக்குமதி முறையே, 6,54,255 டன் மற்றும் 6,70,762 டன் என்ற அளவில் இருந்தது.நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி தொகுப்பில், பாமாயில் பங்களிப்பு, 71 சதவீதமாகவும், இதர எண்ணெய் வகைகள் இறக்குமதி, 29 சதவீதமாகவும் உள்ளன.இந்தியாவின் தாவர எண்ணெய்க்கான தேவை ஆண்டுக்கு, 1.70 –1.80 கோடி டன்னாக உள்ளது.
இதில், 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. சென்ற ஜூன் மாதத்தில், இதர வகை பிரிவில், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 2,62,489 டன்னாக அதிகரித்துள்ளது. இது, மே மாதத்தில், 2,40,329 டன்னாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், ஒரு டன் கச்சா பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விலை முறையே, 841 டாலர் மற்றும் 936 டாலர் என்ற அளவில் இருந்தன.
இந்தோேனஷியா:கணக்கீட்டு மாதத்தில்,நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 4 சதவீதம் சரிவடைந்து, 9,47,591 டன்னிலிருந்து, 8,83,679 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியா அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது.இதே போன்று, லத்தீன் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெயும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயும், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|