பதிவு செய்த நாள்
17 ஜூலை2014
10:00

மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (ஜூலை 17)இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது(காலை 9 மணி நிலவரம்)சென்செக்ஸ் 60.75 புள்ளிகள் உயர்ந்து 25,610.47 புள்ளிகளாகவும், நிப்டி 15.65 புள்ளிகள் உயர்ந்து 7,640.05 புள்ளிகளாகவும் உள்ளன.
டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் காலாண்டு லாபம் அதிகரித்திருப்பதன் காரணமாகவும், சில்லறை வணிகத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவும் பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|