பதிவு செய்த நாள்
19 ஜூலை2014
11:55
ஒரு கார் வாங்குவதற்கு சில பல லட்சங்களை முதலீடு செய்கிறோம். அந்த வாகனத்தை நல்ல முறையில் பராமரிக்கவும், பாதுகாக்கவும் மேலும் பணத்தை செலவு செய்கிறோம். பயணம் சுகமாய் இருக்க, பொழுது போக்கு மற்றும் சொகுசு அம்சங்களை கம்பெனி பொருட்களுக்கு மாற்றாகவோ, புதிதாகவோ, சில ஆயிரங்களை செலவு செய்கிறோம். இந்த வகையில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு செலவு நம் காரின் தேவைக்கு ஏற்ற வகையில் சென்சார்களையும், ரிவர்ஸ் அல்லது பார்க்கிங் கேமராவையும் பொருத்திக் கொள்வது தான்.
வண்டியின் பக்கவாட்டுகளில் பொருத்தப்படும் சென்சார்கள், நம் வண்டிக்கு குறிப்பிட்ட தொலைவில் நெருக்கமாக வரும் மற்ற வாகனங்களையோ, தடைகளையோ பற்றி எச்சரிக்கை செய்வதாகும். விலையுயர்ந்த கார்களில் மட்டுமின்றி, சாதாரண கார்களில் கூட ஏற்படும் கோடுகள், சிராய்ப்புகள் மற்றும் பள்ளங்கள், ‘டிங்கரிங்’ என்ற முறையில் குறைந்தபட்சமாக சில ஆயிரங்களையாவது, பதம் பார்த்து விடுகிறது. இதைத்தவிர, மனக்கஷ்டம் மற்றும் உழைப்பு, நேர விரயங்கள் என்று பார்க்கும் போது, முதலிலேயே சில சென்சார்களை பொருத்திக் கொள்வது, பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதமாக இருக்கும்.
சென்னை போன்ற நகரங்களில், வண்டியை பார்க்கிங் செய்ய பயந்தே, சிலர் வண்டியை வீட்டு போர்டிகோவிலேயே வைத்திருப்பர். நெரிசலான இடத்தில், வண்டியை பார்க்கிங் செய்யும் போது, சிலருக்கு வியர்த்து வெலவெலத்து விடுவதும் உண்டு. இவற்றையெல்லாம் தவிர்க்க உதவுகிறது, பார்க்கிங் சென்சார் அல்லது ரிவர்க்கிங் கேமராக்கள்.
பார்க்கிங் சென்சார்:
இந்த சென்சார்கள் காரின் பின்புறத்தில் இரண்டு, மூன்று இடங்களில் பொருத்தப்படும். இவை அல்ட்ராசோனிக் அலை தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. அவை அனுப்பும் அல்ட்ராசோனிக் அலைகளில் பிரதிபலிப்பிற்கு ஏற்ப, காரின் அருகில் இருக்கும் பொருளின் துாரத்தை கணக்கிட்டு நம்மை ஒலி அல்லது ஒளி மூலமாக எச்சரிக்கிறது.
ரிவர்சிங் கேமரா
இதில் அதிகத்துல்லியம் இருக்கக்கூடிய பார்க்கிங் சென்சார், சவுன்ட் மற்றும் விஷ்வல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகித்து அருகில் உள்ள பொருளின் துாரத்தை கணக்கிடுகிறது. இந்த சென்சார்கள் ரியர் வ்யூ கண்ணாடி இருக்கும் இடத்தி,லோ அதற்கு அருகில் டேஷ்போர்டிலோ டிஎப்டி., எல்சிடி., மானிட்டர் மூலம் காட்சியாக நம் காருக்கும் பக்கத்தில் உள்ள பொருட்களுக்குமான துாரத்தை கணக்கிட்டு காட்டும்.
சைட் சென்சார்:
இந்த சென்சார்கள் காரின் பக்க வாட்டுகளிலும், முன் பக்கங்களிலும், பொருத்தப்பட்டிருக்கும். இதனால், நாம் பயணம் செய்யும் போதும், மற்ற வாகனங்களுக்கு நெருக்கமாக சென்றால், எச்சரிக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|