தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அதிகரிக்கப்பட்ட செயல்திறனுடன், புதிய பி.எம்.டபிள்யூ., எக்ஸ் 1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2014
14:36

பி.எம்.டபிள்யூ., எக்ஸ் 1 இந்த ஆண்டு ஆரம்பத்தில் புது பொலிவுடன் மெருகேற்றப்பட்டு வெளிவந்தது. உட்புற அமைப்பில் சில மாறுதல்களும், கூடுதல் அம்சங்கள் மற்றும் சக்தி கட்டப்பட்ட இன்ஜினுடன் பழைய எக்ஸ் 1ஐவிட சற்றே விலை கூடுதலாக ஆனால், பி.எம்.டபிள்யூ., வாகனங்களில் விலை குறைவானதாகவும் வெளிவந்துள்ளது.
வெளிப்புறத் தோற்றத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறம் பம்பர்கள் பிளாஸ்டிக்கினால் ஆன, பளபளப்பு கூடுதலாக அழகிய வடிவமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கில் எல்.இ.டி., கொரோனா வளையங்கள் உள்ளதும், வெளிப்புற கண்ணாடி இன்டிகேட்டர் பொருத்தப்பட்டு வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ் 1இல், 6 வேக கியர் பாக்சிற்கு பதில் 2 எப், 8 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முழுவதும் கருப்பு நிறத்தினால் ஆன, டேஷ்போர்ட் மற்றும் இருக்கைகள் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல், ‘ஏசி’ மின்சார இயக்கம் கொண்ட கண்ணாடிகள் மற்றும் பனி விளக்குகள், கன்சோலில் உள்ள கம்ப்யூட்டர், சிறப்பான திறனுடன் ஆடியோ சிஸ்டம், பல நிறங்களில் ஒளிரும் உட்புற விளக்கு, தோல் உறை கொண்ட மாற்றங்கள் செய்து கொள்ள கூடிய பவர் ஸ்டியரிங் போன்றவை எக்ஸ் 1 மாடலின் சிறப்புகளாக உள்ளன. இதைத்தவிர, 8.8 அங்குல தொடுதிரையும், அதில் கம்ப்யூட்டரின் வன் பொருளில் மூலம் இயங்கும் நேவிகேஷன் சிஸ்டம் தொலை துாரப்பயணங்களில் வெகுவாய் கைக்கொடுக்கிறது. பேளரோமா சன் ரூப், மின்சார இயக்க இருக்கைகள் மழையை அறிந்து செயல்படும் வைப்பர்கள் போன்றவைகள் மற்ற சிறப்பம்சங்கள்.
எக்ஸ் 1 உயரும் தரையிலிருந்து குறைவாக இருக்கிறது. இது வண்டியில் ஏறுவதற்கு சற்றே சிரமமாக உள்ளது. புதிய எக்ஸ் 1ல் சக்தியும், இழுப்புத் திறனும் கூட்டப்பட்டுள்ளது. 181 பி.எச்.பி., சக்தியும் 38.8 கே.ஜி.எம்., இழுப்பு விசையையும் அளிக்கிறது.
இதன் இன்ஜின் 100 கி.மீ., 8.25 நொடியில் அடைவதுடன், இதன் அதிக பட்ச இழுப்பு விசையை 1,750 ஆர்பிஎம்மில் அடைத்து விடுகிறது. இதன் இன்ஜினுடன் மிகக்சிறப்பாக இயங்குகிறது. இதன் 8 வேக ஆட்டோ கியர் சிஸ்டம்.
இதன் மின்சார இயக்கம் கொண்டு ஸ்டியரிங் முறை மிகச்சிறப்பாக இயங்கி, ஓட்டுபவரின் ‘மனமறிந்து’ நடந்துக்கொள்கிறது.
பி.எம்.டபிள்யூ., விசுவாசிகளுக்கு பழைய எக்ஸ் 1 இல் இருந்த ஏமாற்றங்களை எல்லாம் முடிந்தவரை சரிசெய்து வெளிவந்துள்ளது, புதிய எக்ஸ் 1. அதிகரிக்கப்பட்ட இன்ஜின் செயல்திறன், சிறிய கார் என்ற எண்ணத்தை முழுவதுமாய் மாற்றி, உணரச்செய்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)