பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:38
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 168 ரூபாய் சரிவடைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,669 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,352 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,550 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலையில், மாற்றம் இல்லாததால், முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 48.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 45,320 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த திங்களன்று (19ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,690 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 21 ரூபாயும், சவரனுக்கு, 168 ரூபாயும் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|