பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:31

சேலம்:ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த, பூண்டு வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் விலை இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது.அறுவடை பாதிப்பு:தமிழகத்துக்கு தேவையான பூண்டு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.இந்த மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருவதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதோடு, சேமிப்பு கிடங்குகளில் இருந்து பூண்டை வெளியே அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத கடைசி வாரத்தில், சென்னை, சேலம், விருதுநகர் சந்தைகளுக்கு, வட மாநிலங்களில் இருந்து வாரத்துக்கு, 70 லாரிகளில் பூண்டு விற்பனைக்கு வந்தது.ஜூன், 29ம் தேதி ரம்ஜான் நோன்பு துவங்கி உள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த பூண்டு, கர்நாடகாவுக்கு செல்ல துவங்கியது. இதையடுத்து, பூண்டு வரத்து, 20 லாரிகளாக சரிவடைந்தது.ரம்ஜான்வரத்து மிகவும் குறைந்துள்ளதால், சந்தையில், பூண்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், பெரிய வியாபாரிகள் அதிக அளவில் பூண்டை இருப்பு வைத்துள்ளனர். இதன் காரணமாக, ஜூலை முதல் வாரத்தில், 90 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூண்டு, 110 ரூபாயாக உயர்ந்தது.இந்நிலையில், நேற்று மேலும், 60 ரூபாய் உயர்வு ஏற்பட்டு, மொத்த விலை சந்தையில் ஒரு கிலோ பூண்டு, 170 ரூபாய்க்கு விற்பனையானது. இது, சில்லரை விற்பனையில், 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.நாட்டு பூண்டின் விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, நீலகிரி பூண்டின் விலையும், கிலோவுக்கு, 30 ரூபாய் அதிகரித்துள்ளது, நேற்றைய நிலவரப்படி, நீலகிரி பூண்டு, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ரம்ஜான், ஆடி மாத பண்டிகைகள் காரணமாக, பூண்டின் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|