பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
08:35

மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில், 2012 ஏப்ரல், 12ம் தேதி, மல்டி பர்ப்பஸ் வைக்கிள்(எம்.பி.வி.,) பிரிவில், ‘எர்டிகா’ காரை அறிமுகப்படுத்தியது. இதன் இருக்கை வசதி,5 + 2.இதில்,a பெட்ரோல் காரில், கே – சீரிஸ் இன்ஜினும், டீசல் காரில், பியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. மாருதி சுசூகியின், ‘ஸ்விப்ட்’ கார் பிளாட்பாரத்தில், ‘எர்டிகா’ கார் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்திய சந்தையில், 1.50 லட்சம் ‘எர்டிகா’ கார்கள் விற்பனை என்ற சாதனையை மாருதி சுசூகி நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக, ‘எர்டிகா’வின், ‘லிமிடெட் எடிஷன்’ காரை, அறிமுகப்படுத்தி உள்ளது.பெட்ரோல், சி.என்.ஜி., மற்றும் டீசல் என, மூன்று வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும். காரின் வண்ணம், நீல நிறம். ரியர் பார்க்கிங், டிஜிட்டல் டிஸ்பிளே கொண்ட அசிஸ்ட் சென்சார், ஹை கிரேடு இன்டகரேட்டட் ஆடியோ ஆகிய புதிய வசதிகளை கொண்டது. லிமிடெட் எடிஷன் கார் விலை (எக்ஸ் ஷோரூம், டில்லி. டீலர் ஷோரூமில் பொருத்தப்படும், 6,190 ரூபாய் மதிப்புள்ள,‘எம்.ஜி.ஏ., கிட்’ நீங்கலாக)பெட்ரோல் கார் - 6,76, 836 ரூபாய்சி.என்.ஜி., கார் - 7,34, 872 ரூபாய்டீசல் கார் - 8,05,677 ரூபாய்
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|