பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
15:23

புதுடில்லி : வெளிமார்க்கெட்டில், 10 மில்லியன் டன் கோதுமை விற்பனை செய்ய மத்திய பொருளாதார விவகார அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திமோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அப்படி வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் போது குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக சரக்கு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும்.
உள்நாட்டில் கோதுமை புழக்கத்தை அதிகப்படுத்தவும், விலையை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோதுமை விலை அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2013-14 8.5 மில்லியன் டன் கோதுமையை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் 5.8 மில்லியன் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைத்த வருவாய் ரூ.9,310 கோடி என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|