பதிவு செய்த நாள்
25 ஜூலை2014
00:36

புதுடில்லி :மத்திய அரசு, 1 கோடி டன் கோதுமையை, வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
உள்நாட்டு சந்தைகளில் சப்ளையை அதிகரித்து, கோதுமை விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள உபரி கோதுமை கையிருப்பை குறைக்கும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதன்படி, இந்திய உணவுக் கழகத்திடம் உபரியாக உள்ள கோதுமையில், 1 கோடி டன்னை, வெளிச்சந்தைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிச்சந்தை விற்பனைக்கான, ஒரு குவிண்டால் கோதுமையின் விலை, 1,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இம்மாத துவக்க நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம், 4 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது.உள்நாட்டில், கடந்த சில நாட்களாக, கோதுமையின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடப்பு ஜூலை மாதத்தில், மொத்த விலை சந்தையில் ஒரு கிலோ கோதுமையின் விலை, 19 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 16.10 ரூபாயாக இருந்தது.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், வெளிச்சந்தையில், 85 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், 58 லட்சம் டன் மட்டுமே விற்பனையானது. இதன் மூலம், அரசுக்கு, 9,310 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.கடந்த 2013 – 14ம் பயிர் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக, 9.56 கோடி டன்னாக இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|