பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
15:15
அசூஸ் நிறுவனம் தன் ஸென்போன் வரிசையில் ஸென்போன் 5 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்து சென்ற கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.
இந்த போனின் சிறப்பம்சங்கள்: 5 அங்குல கெபாசிடிவ் மல்ட்டி டச் டிஸ்பிளே தரும் திரை. கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கிடைக்கிறது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இண்டெல் ஆட்டம் Z2560 ப்ராசசர் இரண்டு மைக்ரோ சிம்களைப் பயன்படுத்தும் வசதி. ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதனை அடுத்த 4.4. கிட் கேட் சிஸ்டத்திற்கு அப்டேட் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா மற்றும் 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை கிடைக்கின்றன.
இதன் தடிமன் 10.34 மிமீ. எடை 145 கிராம். இதன் ராம் மெமரி 2ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 மற்றும் 16 ஜிபி கொண்டு இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதனை 64 ஜிபி வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2110 mAh திறன் கொண்டது. இந்த போன் கருப்பு, வெள்ளை, பழுப்பு, சிகப்பு மற்றும் தங்க வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.9999 (8 ஜி.பி) ரூ.13,999 (16 ஜி.பி).
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|