பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
16:39
புதுடில்லி : இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் வோடோபோன் நிறுவனம், 2014-15ம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் இந்தியாவில் கிடைத்த வருமானத்தை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் வருமானம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.10,323 கோடியாக உள்ளதாகவும், கடந்தாண்டு இது ரூ.9,375 கோடியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் பிரிட்டிஷ் மதிப்பான பவுண்ட்டில் ஒப்பிடும் போது, வருமானம் 6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் முதல்காலாண்டில் இந்தியாவில் வோடோபோன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் உயர்ந்துள்ளதாகவும், இதன்மூலம் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 169.9 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், இதில் மொபைல் இண்டர்நெட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும் வோடோபோன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|