பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
23:39
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்திருந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,631 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,048 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,140 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 2,651 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 21,208 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 210 ரூபாய் உயர்ந்து, 28,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 48 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,905 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த திங்களன்று (21ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,670 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 19 ரூபாயும், சவரனுக்கு, 152 ரூபாயும் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|