‘நாட்டின் தேயிலை உற்­பத்தி 120 கோடி கிலோவை தாண்டும்’‘நாட்டின் தேயிலை உற்­பத்தி 120 கோடி கிலோவை தாண்டும்’ ... ஆயுர்வேத மருந்து ஏற்றுமதிரூ.2,267 கோடியாக அதிகரிப்பு ஆயுர்வேத மருந்து ஏற்றுமதிரூ.2,267 கோடியாக அதிகரிப்பு ...
நவ­ரத்­தின ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி சூடு­பி­டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2014
23:45

மும்பை:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் ஏப்ரல் முதல், ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில், நாட்டின் நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 7.71 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 50,334 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது என, நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்­கா­லிக புள்ளி விவ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு:கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், இவற்றின் ஏற்­று­மதி, 46,731 கோடி ரூபா­யாக இருந்­தது. மதிப்­பீட்டு காலாண்டில், டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு உயர்வால், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையி ல் சிறப்­பாக உயர்ந்­துள்­ளது.
அதே­ச­மயம், டாலர் மதிப்பின் அடிப்­ப­டையில், இவற்றின் ஏற்­று­மதி, 0.60 சத­வீதம் மட்­டுமே உயர்ந்து, 836 கோடி டால­ரி­லி­ருந்து, 841 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. கணக்­கீட்டு காலாண்டில், நறுக்­கப்­பட்ட மற்று பட்டை தீட்­டப்­பட்ட வைரங்கள் ஏற்­று­மதி, 6.34 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 26,660 கோடி­யி­லி­ருந்து, 28,349 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது.
பதக்கங்கள்:அதே­ச­மயம், அளவின் அடிப்­ப­டையில் இவற்றின் ஏற்­று­மதி, 86 லட்சம் காரட்­டி­லி­ருந்து, 81 லட்சம் காரட்­டாகக் குறைந்­துள்­ளது. தங்க ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, 27.52 சத­வீதம் அதி­க­ரித்து, 9,155 கோடி­யி­லி­ருந்து, 11,675 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.இதே போன்று, தங்க பதக்­கங்கள் மற்றும் நாண­யங்கள் ஏற்­று­ம­தியும், 32.67 சத­வீதம் உயர்ந்து, 4,181 கோடி­யி­லி­ருந்து, 5,547 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
அதே­ச­மயம், வெள்ளி ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி, மதிப்­பீட்டு காலாண்டில், 4.36 சத­வீதம் குறைந்து, 2,218 கோடி­யி­லி­ருந்து, 2,121 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.மேலும், நவ­ரத்­தி­னங்கள் ஏற்­று­ம­தியும், 57.07 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 717 கோடி­யி­லி­ருந்து, 308 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.இவை தவிர, கச்சா வைரங்கள் ஏற்­று­ம­தியும், 5.98 சத­வீதம் குறைந்து, 2,287 கோடி­யி­லி­ருந்து, 2,150 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.
செயற்கை முத்­துகள்:இவற்றின் ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டை­யிலும், 32.47 சத­வீதம் சரி­வ­டைந்து, 117 லட்சம் காரட்­டி­லி­ருந்து, 79 லட்சம் காரட்­டாகக் குறைந்­துள்­ளது.அதே­ச­மயம், கணக்­கீட்டு காலாண்டில், செயற்கை முத்­துகள் ஏற்­று­மதி, 79 கோடி­யி­லி­ருந்து, 115 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது என, ஜி.ஜே.இ.பி.சி., புள்­ளி­ வி­வ­ரத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)