‘முட்டை விலை இனி குறையாது’ : நாமக்கல் ‘நிக்’ அதிரடி அறிவிப்பு‘முட்டை விலை இனி குறையாது’ : நாமக்கல் ‘நிக்’ அதிரடி அறிவிப்பு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.55 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.55 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
23:38

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, காலை துவங்கியதும் மந்தமாக இருந்தது.
இதற்கிடையே, மருந்து துறை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் வெளியானது. இது, சந்தை மதிப்பீட்டை விட, சிறப்பாக இருந்ததையடுத்து, பங்கு வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியது.
மேலும், வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதையடுத்து, வங்கி துறை குறியீட்டு எண், 1.57 சதவீதம் உயர்ந்தது.நுகர்வோர் சாதனங்கள் (1.47 சதவீதம்), மருந்து (1.35 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.
அதேசமயம், பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் சரிவை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 96.19 புள்ளிகள் அதிகரித்து, 26,087.42 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், எல் அண்டு டி, விப்ரோ உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 42.70 புள்ளிகள் உயர்ந்து, 7,791.40 புள்ளிகளில் நிலை கொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)