பதிவு செய்த நாள்
06 ஆக2014
06:10

புதுடில்லி:கடந்த ஓராண்டில் பால் விலை, 14.50 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் தெரிவித்தார்.கடந்த 2013 மே முதல் 2014ம் ஆண்டு மே மாதம் வரையிலான, ஓராண்டு காலத்தில், சராசரி பால் கொள்முதல் விலை, 17.68 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், கூட்டுறவு துறை மூலமான இதன் விற்பனை விலை, 14.50 சதவீதம் உயர்ந்துள்ளது.பால் விலை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், கூட்டுறவு மற்றும் தனியார் பால்பண்ணை நிறுவனங்கள், பால் விலையை, ஆண்டுக்கு, 2 – 3 முறை நிர்ணயம் செய்கின்றன. கடைசியாக, நடப்பாண்டு மே மாதத்தில், பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு, கொள்முதல் விலை அதிகரிப்பே காரணமாக கூறப்பட்டுள்ளது என, தன்வே மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|