பதிவு செய்த நாள்
06 ஆக2014
06:10

புதுடில்லி:ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, கரும்பு விவசாயிகளுக்கு, தமிழக சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி, 504 கோடி ரூபாயாக உள்ளது என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராவ்சாகேப் பாடீல் தன்வே பார்லிமென்டில் தெரிவித்தார்.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்திற்கு (அக்.,–செப்.,), நாடு தழுவிய அளவில், கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ஒட்டுமொத்த பாக்கி, 57,104 கோடி ரூபாயாக உள்ளது. இதில், சென்ற ஜூலை 31ம் வரையிலுமாக, 47,852 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.
இதையடுத்து, சர்க்கரை ஆலைகள் இன்னும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை, 9,252 கோடி ரூபாயாக உள்ளது.இதில், உத்தர பிரதேச சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி, அதிகபட்சமாக, 5,741 கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, கர்நாடகா மாநில சர்க்கரை ஆலைகள், 1,795 கோடி ரூபாயை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது என, தன்வே மேலும் கூறினார்.கரும்பு பயிரிடும் பரப்பு, 2 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையிலும், வரும் 2014 – 15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., – செப்.,) நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 4 சதவீதம் அதிகரித்து, 2.53 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா’ மதிப்பிட்டுள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இதன் உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இந்தியாவின் சர்க்கரை தேவை, ஆண்டுக்கு, 2.40 கோடி டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|