பதிவு செய்த நாள்
06 ஆக2014
06:12

மும்பை:பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மூன்றாவது இருமாத நிதி ஆய்வு கொள்கையை,நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கச்சா எண்ணெய்பருவமழை குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதனால், உணவு பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு எழுந்துள்ளது.மேலும், உலக நிலவரங்களால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல், 8 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டுள்ளது.இதே போன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதமும், மாற்றம் எதுவுமின்றி 7 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும்.மேலும், வங்கிகள் திரட்டும் மொத்த டிபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியில் வைக்கும், ரொக்க இருப்பு விகிதமும் (சி.ஆர்.ஆர்.,), 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும்.பொருளாதார வளர்ச்சிஅதேசமயம், வங்கிகளுக்கான, சட்டப்பூர்வ ஆயத்த தொகை இருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.,), 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு, 22 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வங்கிகளின் புழக்கத்திற்கு, கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள், சில்லரை பணவீக்கத்தை, 8 சதவீதம் என்ற அளவிலும், 2016ம் ஆண்டு ஜனவரியில், இதனை, 6 சதவீதம் என்ற அளவில் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுவங்கி துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், அடுத்த நிதி ஆய்வு கொள்கை, செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|